குமாரபாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க பொதுக்குழு கூட்டம்

குமாரபாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க  பொதுக்குழு கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு நகராட்சி சமுதாய அமைப்பாளர் ரகு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க பொதுக்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

குமாரபாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமுதாய வளர் பயிற்றுனர்கள் மகாலட்சுமி, நாராயணி தலைமையில் நடந்தது. இதில் வாகைசூடி, புவிதம், மாலாலா, சிங்கப்பெண்கள், செந்தளிர், புத்தர் தெரு ஆகிய 6 கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.

இதில் அனைத்து கூட்டமைப்பின் வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. கூட்டமைப்பின் பதிவேடுகள் பராமரிப்பு பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களுக்கும் காப்பீடு எடுப்பது, அனைத்து கூட்டமைப்பின் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக நகராட்சி சமுதாய அமைப்பாளர் ரகு பங்கேற்று, சிறப்பாக பணியாற்றிய மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

Tags

Next Story