குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு
குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய மாநாட்டில் மாவட்ட செயலர் பெருமாள் பேசினார்.
குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய ஐந்தாவது மாநாடு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமையில் கண்ணப்ப நாயனார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். நாகராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மணிகண்டன் வரவேற்க, ஒன்றிய செயலர் தனேந்திரன் வரவு, செலவு அறிக்கையை சமர்பித்தார். புதிய தலைவராக மாணிக்கராஜ், செயலராக தனேந்திரன், பொருளராக வேலுசாமி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலர் பெருமாள் பதவியில் அமர்த்தினார்.
எலந்தகுட்டை ஊராட்சி பெதக்காட்டூர் பகுதியில் சாய பூங்கா அமைவதை தடுத்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும், அருவங்காடு பகுதியில் உள்ள நெசவு பூங்காவில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் மாசு படுவதை தடுக்க வேண்டும், விவசாய விளை நிலங்களை பிளாட் போட்டு விற்பதை தடுக்க வேண்டும், வேளாங்காடு பகுதியில் பெரிய குளம் அமைத்து தர வேண்டும், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கூடாது, மேட்டூர் உபரி நீரை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுதும் உள்ள ஏரிகள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu