சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ. 3 ல் போராட்டம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் அழைப்பு

சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ. 3 ல் போராட்டம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் அழைப்பு
X
சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ. 3 ல் சென்னையில் நடத்தவிருக்கும் போராட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு பிராமணர் சங்கம், அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளனர்.

சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ.3ல் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம், அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கம் சார்பில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் திருவொற்றியூர் நாராயணன் கூறியதாவது:

பிராமணர்கள் மீதான அவதூறு பிரச்சாரம் மற்றும் பொய் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் கௌரவத்தை பாதுகாக்கவும், இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், வரும் நவ.3ல் காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அனைத்து பிராமணர்களும் கலந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.

மத்திய, மாநில அரசுகளிடம் சட்டப் பாதுகாப்பு கோரி நடக்கும் இப் போராட்டத்தில் மாநிலத்திலுள்ள மாவட்ட அமைப்புகள் கலந்து கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில அமைப்பு அலுவலகத்தில் தெரிவிக்கவும். மாநில பொதுச் செயலாளர் கோவை ரமேஷ், மாநில பொருளாளர் பருத்திப்பட்டு நரசிம்மன், மாநில மகளிரணி செயலாளர் பிரபாவதி, மாநில இளைஞரணி செயலாளர் சௌரிராஜன், மாநில தலைமை நிலைய செயலாளர் மயிலை பாலு ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று கூறினார்.

தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணாச்சலம், பொதுச் செயலாளர் பாலசடாட்ஷரம் ஆகியோர் கூறியதாவது:

பிராமணர்களில் மிகவும் பரிதாபத்திற்குரியது, தொன்றுதொட்டு உலக நன்மைக்காக இறை பணி ஆற்றி வருபவர்கள் ஆதி சைவ சிவாச்சாரியார்கள்,வைகானச, பாஞ்சராத்ர பட்டாச்சாரியார்கள் அடங்கிய அர்ச்சகர்கள் சமூகம்தான். பொருளாதாரம், கல்வி, சமூக அந்தஸ்து ஆகிய எல்லா நிலைகளிலும் மிகவும் பின் தங்கியவர்களாக உள்ளனர். நாட்டில் பல நேரங்களில் இழிவு படுத்தப்படுவதும், வன்மத்துக்கு ஆளாவதும், கேலி, கிண்டல் செய்யப்படுவதும் ஆதி சைவ பிராமணர்கள் உள்ளிட்ட அர்ச்சகர்கள் சமூகம்தான். எனவே, பிராமணர்களின் நலனுக்காக நவ.3ம் தேதி சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story
Similar Posts
சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ. 3 ல் போராட்டம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் அழைப்பு
இந்திரா காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு!
மாவட்ட அளவிலான தடகள  போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் சாம்பியன்
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து  அரசு பள்ளியில்  தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
சுகர் பேஷன்டா? தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டாலும் சுகர் பிரச்னை வராமல் இருக்க ஒரு வழி இருக்கு..!
தீபாவளிக்கு இதெல்லாம் செய்யணுமா? பாதுகாப்பா பட்டாசு வெடிங்க மக்களே..!
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில்  ஆயுர்வேத நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு ஆண்கள் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை..!
பாதிக்கு பாதி விலை..! இந்த தீபாவளிக்கு உங்க செல்லத்துக்கு கியூட் கிஃப்ட் வாங்கி குடுங்க..!