அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

அரசு பள்ளியில்   தமிழ் கூடல் நிகழ்ச்சி
X
குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது.

அரசு பள்ளியில்

தமிழ் கூடல் நிகழ்ச்சி



குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஜந்தா, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பாட்டு போட்டி, கவிதை எழுதுதல் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் காந்தி நாச்சிமுத்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் லட்சுமி காமாட்சி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டியில் வட்டார அளவில் முதலிடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி அனன்யா, எட்டாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் ஆகியோருக்கும் , கட்டுரைப் போட்டியில் நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜெகதீஸ்வரிக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் குமார், தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது.

Next Story
ai solutions for small business