தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழ் ஆர்வலர்கள் ஆலோசனை கூட்டம்
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி, குமாரபாளையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழ் ஆர்வலர்கள் சார்பில் குமாரபாளையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழ் ஆர்வலர்கள் சார்பில் குமாரபாளையத்தில் ஆலோசனை கூட்டம் வழக்கறிஞர் கார்த்தி தலைமையில் நடந்தது.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி, சென்னை எழும்பூரில் வழக்குரைஞர்கள், தமிழார்வலர்கள் நடந்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, குமாரபாளையத்தில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் மார்ச் 9ல் நடத்துவதென இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழார்வலர்கள், சமூக சேவையாளர்கள் ரவி, கணேஷ்குமார், பன்னீர்செல்வம், பாண்டியன், சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் சி.பி.ஐ. சார்பில் விதி மீறும் மது கடைகள், லாட்டரி விற்பனை தடுக்க கோரி நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இரவு 10:00 மணிக்கு மேலும், மறுநாள் பகல் 12:00 மணி வரையில், விதி மீறி மது விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வருவதால், இவைகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து கணேஷ்குமார் கூறியதாவது:
குமாரபாளையத்தில் விசைத்தறி மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டிய வருமானத்தை, விதி மீறும் மது கடைகளில் மற்றும் லாட்டரி கடைகளில் கொடுத்து குடித்து விட்டு, வீட்டிற்கு பணம் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்.
இது பெரும்பாலான குடும்பத்தாரை மிகவும் கவலையடைய வைத்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், கஷ்டம் தாங்க முடியாமல் அசம்பாவிதம் ஏற்படும் நிலையும் உருவாகும். அது போல் ஆவதற்கு முன்பு, எண்ணற்ற தொழிலாளர் குடும்பத்தாரை காக்க, இது போன்ற கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும், விதி மீறுவோர் மீது சட்டப்படி கைது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நிர்வாகிகள் அர்த்தநாரி, விஜய்ஆனந்த், ஈஸ்வரன், கார்த்திகேயன், அசோகன், மணிவேலன், கேசவன், மனோகரன், மாதேஷ், ரவி, கணேசன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu