/* */

12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அழகேசனுக்கு வாக்குகள் கேட்ட ஆதரவாளர்கள்

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசனுக்கு ஆதரவளிக்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களை கேட்டுக்கொண்டனர்.

HIGHLIGHTS

12வது வார்டு  சுயேட்சை வேட்பாளர் அழகேசனுக்கு வாக்குகள் கேட்ட ஆதரவாளர்கள்
X

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசனுக்கு ஆதரவளிக்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களை கேட்டுக்கொண்டனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவுடன் தீப்பெட்டி சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அழகேசன். 12வார்டின் முழுமைக்குமான சாக்கடை வரைபடம் தயார் செய்து ஆய்வு குழு ஏற்படுத்தி வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். மாதம் ஒரு முறை சொந்த செலவில் கொசு மருந்து அடிக்கப்படும்.

பொதுக்கழிப்பிடம் சீரான முறையில் குறிப்பிட்ட கால அளவில் சுத்தம் செய்யப்படும். சுகாதார பணியாளர்களை கொண்டு தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதை உறுதி செய்வோம். ஒற்றை பெற்றோர் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள குடும்பங்களில் இருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர உதவி செய்யப்படும்.

தகுதியான நபர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் கூறி பிரச்சாரம் செய்தார்.

நேற்று தேர்தல் நாளில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு செய்ய வந்த வாக்காளர்களிடம் அழகேசனின் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டனர்.

Updated On: 20 Feb 2022 3:27 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  3. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  5. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  7. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  8. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  9. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  10. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்