குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்  வழங்கல்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை ஆற்றல் பவுன்டேசன் மூலம் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஆற்றல் அசோக்குமார் வழங்கினர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை ஆற்றல் பவுன்டேசன் மூலம் முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை ஆற்றல் பவுன்டேசன் மூலம் முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

ஈரோடு ஆற்றல் பவுண்டேசன் சார்பில் பல்வேறு சேவை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயாதெர்மை எனப்படும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை டாக்டர் பாரதி தலைமை வகித்தார். ஆற்றல் பவுண்டேசன் அமைப்பாளர் அசோக்குமார், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் இந்த மருத்துவ உபகரணத்தை டாக்டர் பாரதியிடம் வழங்கினார்கள்.

அப்போது டாக்டர் பாரதி கூறியதாவது:-

இந்த உபகரணம் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, எலும்பு முறிவு, கர்ப்பப்பை சம்பந்தமான அறுவை சிகிச்சையின் போது, ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் கருவி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைக்கப்பெற்றது. அதன் சான்றிதழை அமைச்சர் தங்கமணி பார்த்து, டாக்டர் பாரதி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பாராட்டினார்.

குமாரபாளையம் பகுதியில் ஆற்றல் அறக்கட்டளையின் உணவகம் திறப்பு விழாவிற்கு அமைப்பாளர் அசோக்குமார் தலைமை வகித்தார்.திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளையின் நிறுவனர் குரு மகான் ஆசியோடு, உணவகத்தை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனர் ஆற்றல் அசோக்குமார் வரவேற்று புதிய மருத்துவமனை மற்றும் உணவகம் குறித்து கூறியதாவது:-

ஆற்றல் அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு சமுதாயப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஈரோடு திருப்பூர் நாமக்கல் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது .அரசு பள்ளிகள் சமுதாயக்கூடங்கள் ஆலயங்கள் புனரமைப்பு. பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துள்ளது.அறக்கட்டளையின் சிறப்பு அம்சமாக ரூபாய் பத்து கட்டணத்தில் உணவகம் மருத்துவமனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் தொடங்கப்பட்டு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்று மகிழ்ச்சியாக வாழ்த்தி வருகின்றனர்.

இந்த சேவையை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்று பெரியோர்கள் நண்பர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் குமாரபாளையத்தில் உணவகம், பள்ளிபாளையத்தில் மருத்துவமனை துவக்கி உள்ளோம். உணவகத்தில் ஒரு வேளை உணவுக்கு பத்து ரூபாய், அதே போல் மருத்துவ மனையில் பத்து விதமான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிபாளையத்தில் பத்து ரூபாய் சிகிச்சை கட்டணம் பெறும் வகையில் மருத்துவமனை திறக்கப்பட்டது.

இதில் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் குமணன், ரோட்டரி சங்க தலைவர் சந்திரன், லயன்ஸ் சங்க நிர்வாகி தனபால் பள்ளிபாளையம் தொழிலதிபர்கள் பழனிச்சாமி, தங்கவேல், திருமூர்த்தி, ஜெயபிரகாஷ், சத்திவேல், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக உலகசமாதனா ஆலயம் சார்பில் யோகா பயிற்சியாளர் சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

Tags

Next Story