ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வழங்கல்

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வழங்கல்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள் சார்பில் தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் தலைமை டாக்டர் பாரதியிடம் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உபகரணம் வழங்கல் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள் சார்பில் ஜி.ஹெச்.க்கு குழந்தைகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவில் பயன்படுத்தும் 2 கிராஸ் கார்ட், இருதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கண்டுபிடிக்கும் மல்டி பாரா மானிட்டர் ஆகிய ரூ.2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கல்லூரி தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர், தலைமை டாக்டர் பாரதியிடம் ஒப்படைத்தனர்.

இதன் செயல்பாட்டினை செந்தாமரை துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலகம் முன்பிருந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் துவங்கிய புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஒம் சரவணா, நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் கல்லூரி தாளாளர் செந்தாமரை, ஒம் சரவணா, நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் புகையிலை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வழி நெடுக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!