ஆசிரியை கண்டித்தால் தற்கொலை: மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ஆசிரியை கண்டித்தால் தற்கொலை: மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
X

மாணவனின் உடலை வாங்க அவரது உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே ஆசிரியை கண்டித்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை வாங்க அவரது உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சக மாணவியுடன் பேசியதற்காக பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன், பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவரின் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இது குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. வெப்படை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story