லாரியில் இருந்து சரிந்த கரும்புகள்... ஓசியில் 'ருசி' பார்த்த பொதுமக்கள்!

லாரியில் இருந்து சரிந்த கரும்புகள்...  ஓசியில் ருசி பார்த்த பொதுமக்கள்!
X
பள்ளிப்பாளையம் அருகே, லாரியில் இருந்து கரும்பு ரோட்டில் சரிந்து விழுந்தது; இதனை பொதுமக்கள் ருசி பார்த்துச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலையில் உள்ளது ஆலம்பாளையம் கிராமம். இங்கு இன்று மாலை 6.00 மணியளவில், கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று, திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், சிறிய வேகத்தடை ஒன்றில் லாரி ஏறி இறங்கியது. அப்போது, எதிர்பாராதாவிதமாக, லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்து, கரும்புக் கட்டுகள் சடசடவென்று சாலையில் விழுந்து சிதறின.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்து பொதுமக்கள், ஓடோடிச் சென்று சிதறிக்கிடந்த கரும்புகளை அள்ளிச் சென்று ருசி பார்த்தனர். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, சிதறிக்கிடந்த கரும்புகளை கட்டி, லாரி டிரைவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!