குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி ஆய்வு

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான  பணி ஆய்வு
X

குமாரபாளையத்தில் புதிய தினசரி மார்க்கெட் கட்டுமான பணியை நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் அரசு மருத்துவமனை அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பஸ் நிலைய வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து, பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஆனந்தன், உள்பட பலர் உடனிருந்தனர்.

குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் பேருந்து நிலைய கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதையடுத்து குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் பேரில் நகர் மன்ற தலைவர் விஜய்கண்ணன், தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடம் தயார் செய்து அனுப்பி வைத்தார்.

புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் நகர மன்ற தலைவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி, சேலம் மண்டல நகராட்சிகள் இயக்குனர் ராஜன் வழிகாட்டுதல் பேரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவு பங்கேற்று இந்த கலை நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!