போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவியர்
குமாரபாளையம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் சிறை அறைகள் குறித்தும் போலீஸ் ஸ்டேஷனில் பார்வையிட்டனர்.
போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவியர்
குமாரபாளையம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும், சிறைகள் குறித்தும் போலீஸ் ஸ்டேஷனில் பார்வையிட்டனர்.
குமாரபாளையத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு பயிலும் 60 மாணவ மாணவிகள் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர்கள் பணி குறித்து பார்வையிட்டனர். அப்பொழுது அவர்களிடம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:
காவல்துறையில் பணிபுரியும் அலுவலர்களின் பணிகள், மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் எண் 1098 குறித்து, பள்ளி மாணவ மாணவிகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால், விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும், எனவே பெற்றோர்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவலன் செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
குற்றவாளிகளை பிடித்து வைக்கும் சிறை, குற்றவாளிகளை துப்பாக்கி மூலம் எச்சரிக்கை செய்து பிடிக்கும் நிலை குறித்தும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதைப்போன்ற நேரடி களப்பயணம் மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்கும் என்பதுடன் குற்றங்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் வளர்வதுடன், நாமும் போலீஸ் அதிகாரிகளாக வரவேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கவும் உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu