கராத்தே திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை

குமாரபாளையம் இந்தியன் கிரேட் இந்தியன் கராத்தே மையம் மற்றும் ரித்திக்சா பொதுநல அமைப்பினர் இணைந்து கராத்தே மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே திறனாய்வு போட்டி நடத்தினர். இதில் பவானி, குமாரபாளையத்தை சார்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று தகுதி பட்டைகள் பெற்றனர்.
குமாரபாளையம் மாணவர் சரவணகுமார் கருப்பு பட்டை பெற்றார். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை தலைமை சென்சாய் பன்னீர்செல்வம், பயிற்சியாளர்கள் நவீன், விஜய், மஞ்சுளாதேவி, ரித்திக்சா அமைப்பின் நிர்வாகிகள் மரகதம், மதன்ராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்தினார்கள்.
தேசிய அளவிலான கராத்தே போட்டி
ஒகினாவா கோஜு ரியூ கராத்தே டூ அமைப்பினர் குமாரபாளையம் வட்டமலையை சேர்ந்த பயிற்சியாளர் மாதேஸ்வரன் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றனர். 28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். 6 வயது முதல் 12 வயது வரையிலான போட்டியில் மெர்விதா, சர்வேஸ், கருணாகரா முதல் பரிசும், திவேஷ், பூமிநாத், ஜஸ்னு 2ம் பரிசும், 15 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கான போட்டியில் ஜீவா, லோகேஷ், தர்சன் சண்டை பிரிவில் முதலிடமும், நாகவள்ளி, நாகலட்சுமி,திவ்யா கட்டா பிரிவில் முதலிடமும், கோகுல் என்ற மாணவர் பிளாக்பெல்ட் பிரிவில் முதலிடம் பெற்று பிளாக் பெல்ட் பெற்றார். இவர்களை பயிற்சியாளர் மாதேஸ்வரன், கத்தேரி ஊராட்சி மன்ற தலைவி தமிழ்செல்வி, நிர்வாகி சண்முகம், வார்டு உறுப்பினர் பாலு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினார்கள்.
மாநில அளவிலான கராத்தே போட்டி
சேலம் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு வயது, எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் குமாரபாளையம் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் திருநம்பி, ரோஷன், ஆகியோர் கட்டா பிரிவில் 14 வயது பிரிவின் கீழ் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றனர். பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் சாதனைகராத்தே பயிற்சி மைய
கராத்தே பயிற்சி மைய ஆண்டு விழா
குமாரபாளையத்தில் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மைய 25ஆவது ஆண்டுவிழா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குழுவில் சுதந்திர போராட்ட வீரர் பழனியின் மகனும், பயிற்சியாளருமான பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, டாக்டர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ், நலவாரியம் செல்வராஜ், தன்னார்வலர் ரம்யா, புத்தர் தெரு நகராட்சி பள்ளி ஆசிரியை கார்த்திகா உள்பட பலர் பங்கேற்று, பல்வேறு கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தி பேசினார்கள். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்களை பயிற்சியாளர் பன்னீர்செல்வம் வழங்கி கவுரவப்படுத்தினார். விழாவையொட்டி செல்வராஜ் மலர் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். மாணவ, மாணவியர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சிகளை செய்து காட்டினர். மாணவர்களை பாராட்டினர்.
மண்டல அளவிலான கராத்தே போட்டி
குமாரபாளையம் கியோகுசின் கராத்தே பயிற்சி மையம் சார்பில் மண்டல அளவிலான கராத்தே போட்டி அமைப்பாளர் அர்ஜுனன் தலைமையில் பி.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 802 பேர் பங்கேற்றனர். 10,12,15,16,18,20,25,30 ஆகிய வயது பிரிவுகளின் படி போட்டிகள் நடத்தப்பட்டன.
கட்டா, அடிப்படை, சண்டை பயிற்சி ஆகிய வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டதில் குமாரபாளையம் எஸ்.ஆர்.கே. பள்ளி அணியினர் 29 பரிசுகள் பெற்று முதல் பரிசு மற்றும் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளி அணியினர் 17 பரிசுகள் பெற்று 2ம் இடத்தையும், கோவை செங்கப்பள்ளி அணியினர் 9 பரிசுகள் பெற்று 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓம்ராம் குருஜி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். நடுவர்களாக அர்ஜுன், நவீன், மவுலி, குமார், ரமேஸ் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று போட்டிகளை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
சேர்மன் பாராட்டு
நேஷனல் சோடோ கராத்தே பயிற்சி மையம் சார்பில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு வயது, எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
குமாரபாளையத்தை சேர்ந்த கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் பங்கேற்ற பரத்குமார், திருநம்பி ஆகியோர் மஞ்சள், கருப்பு பெல்ட் பிரிவிலும், ஜுனுகிருஷ்ணன் பிரவுன் பெல்ட் பிரிவிலும் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை போட்டி அமைப்பாளர்கள் செந்தில்நாதன், நிர்வாகிகள் ஜெய்கணேஷ், விக்னேஷ், பசுபதீஸ்வரன், உள்ளிட்ட பலர் வழங்கினார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu