16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது

16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது
X

அந்தியூர் காவல் நிலையம் (பைல் படம்).

அந்தியூர் அருகே 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். அந்தியூர் பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர். மாணவியை பெற்றோர் தேடுவதை அறிந்த மாணவன், மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான். சில நாட்கள் முன்னர் மாணவி சோர்வுடனும், வாந்தி எடுத்தவாறும் இருந்துள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரிக்கையில், மருத்துவ பரிசோதனையில் 3 மாத கர்ப்பமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்ய, போலீசார் மாணவனை கைது செய்து, ஈரோடு இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்