/* */

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்தி உண்ணாவிரதம் நடத்த தீர்மானம்

HIGHLIGHTS

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்
X

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் பேசினார்

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், உண்ணாவிரதம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடுமையான நூல் விலையேற்றம் குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களின் சார்பில் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் அபெக்ஸ் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் மே 16ல் உண்ணாவிரத போராட்டம், மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், ஆகியன நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக போராட்ட நடவடிக்கைகள் குறித்து மே 9ல் ஜவுளி உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதில் பஞ்சாலை சண்முகம், அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ், காங்கிரஸ் சிவராஜ், ஜவுளி உற்பத்தியாளர்கள் அங்கப்பன், சங்குசங்கர், முருகன், சந்திரன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Updated On: 4 May 2022 2:30 PM GMT

Related News