எல்.இ.டி. விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி துவக்கம்

எல்.இ.டி. விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி துவக்கம்
X

குமாரபாளையத்தில்,   எல்.ஈ.டி. மின் விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி  நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில், எல்.இ.டி. மின் விளக்கு கம்பங்களில், மின் இணைப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகராட்சியில், சாலை பாதுகாப்பு பணிக்காக 2 கோடி நிதி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும்,, புதிய தார் சாலையாக மாற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, குமாரபாளையத்தில் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் கம்பங்கள், டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு, ஒரு கம்பத்திற்கு 2 எல்.இ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.இ.டி. விளக்கும் என, மொத்தம் 129 விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி, நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, எல்.இ.டி. மின் விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்