எரியாத தெருவிளக்குகள்: தீப நாளில் 'பிரகாசிக்காத' குமாரபாளையம்

எரியாத தெருவிளக்குகள்: தீப நாளில்  பிரகாசிக்காத குமாரபாளையம்
X

குமாரபாளையம், சேலம் சாலையில் உள்ள மையத்தடுப்பில் தெரு விளக்குகள் எரியவில்லை. 

எரியாத தெரு விளக்குகளால், கார்த்திகை தீப திருநாளில் குமாரபாளையம் நகரில் சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டன.

குமாரபாளையம், சேலம் சாலையில், ராஜம் தியேட்டர் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை இரண்டு கி.மீ. தூரத்திற்கு புதிய மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன. இவை சில நாட்கள் முன்பு எரியவிடப்பட்டன. எனினும், கார்த்திகை தீப திருநாளன நேற்று, ஊர் முழுவதும் ஒவ்வொரு வீட்டின், வியாபார நிறுவனத்தின் முன்பும், கோவில்களின் முன்பும் திருவிளக்குகள் வைத்து அலங்கரித்திருந்தனர்.

ஆனால், இதற்கு நேர்மாறாக, இவ்வளவு நாட்களாக எரிந்த புதிய மின் விளக்குகள், தீப திருநாளாம் நேற்று எரியாமல் இருந்தது. இதனால், குமாரபாளையம் - சேலம் ரோடு இருள் சூழ்ந்து காணப்பட்டது. இது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. முறையாக தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!