2 வயது பெண் குழந்தையை கடித்த நாயால் பொதுமக்கள் அச்சம்..!

2 வயது பெண் குழந்தையை கடித்த நாயால் பொதுமக்கள் அச்சம்..!
X

தெரு நாய்கள் (கோப்பு படம்)

குமாரபாளையத்தில் 2 வயது பெண் குழந்தையை கடித்த நாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குமாரபாளையத்தில் 2 வயது பெண் குழந்தையை கடித்த நாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குமாரபாளையம் கத்தாளபேட்டை பகுதியில் வசிப்பவர்கள் விமலா, மாதேஸ்வரன் தம்பதியர். கூலி தொழிலாளிகள். இவரது 2 வயது மகள் ஹரிணியை, அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று முகத்தில் கடித்தது. இதனால் அந்த பெண் குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டன.

வலியால் துடித்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பகுதியில் நாய் தொல்லைகள் உள்ளது. சில அமைப்பினர் விலங்குகளை வதைக்க கூடாது என்பதால், நகராட்சி நிர்வாகத்தினர், இந்த வெறி நாய்களை பிடிக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். நாயை பிடிக்க நகராட்சி நிர்வாகமும் தயக்கம் காட்டுவதால் பொதுமக்கள் அப்பகுதயில் நடமாட அச்சம் கொண்டுள்ளனர்.

குமாரபாளையத்தில் வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குமாரபாளையத்தில் நாய்கள் அதிகம் தொல்லை தருவதாக நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் கூறியதால் , சில நாட்களுக்கு முன் தொடர்ந்து மூன்று நாட்கள் நாய்கள் பிடிக்கப்பட்டு, அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் பல இடங்களில் நாய்கள் அதிகம் தொல்லை கொடுத்து கொண்டுதான் உள்ளது. நேற்று இரவு 07:00 மணியளவில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சாலையில் போவோர், வருவோர்களை கடித்து வந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், பெரியோர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு, அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:

வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன், அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து, அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் எங்கோ வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story