குமாரபாளையம் நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி துவக்கம்

குமாரபாளையம் நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை   செய்யும் பணி துவக்கம்
X

குமாரபாளையத்தில் தெரு நாய்கள் பிடிக்கும் பணிகள் துவங்கியது.

குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் நாய்கள் பிடித்து கருத்தடை செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.

நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் துவங்கியது.

இது குறித்து குமாரபாளையம் நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-

குமாரபாளையம் நகரத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதாகவும் அதனால் நடந்து செல்பவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளை கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இதன்பின் சேர்மன் விஜய்கண்ணன் முயற்சியின் பேரில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு வெறி நாய் கடி தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக தற்போது நகரத்தில் தெரு நாய்களை பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 43 நாய்கள் பிடிக்கப்பட்டன. இந்த பணிகள் இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், அதன்பின் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நாய்களால் பலருக்கும் பல தொல்லைகள் ஏற்பட்டு வந்தன. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் நாய்கள் பிடிக்க நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். அதற்கான தொகை அரசிடம் கேட்டு பெற்று, அதன்பின் நாய்கள் பிடிக்கும் பணிகள் தொடங்கும் என சேர்மன் விஜய்கண்ணன் கூறி வந்தார். ஒவ்வொரு நகரமன்ற கூடத்தில் இந்த நாய்கள் பற்றிய வாக்குவாதம் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture