அரசு பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர் பூப்பந்து போட்டி துவக்கம்

அரசு பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர்  பூப்பந்து போட்டி துவக்கம்
X

குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர் பூப்பந்து போட்டி துவங்கியது.

குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர் இரண்டு நாட்கள் பூப்பந்து போட்டி துவங்கியது. பள்ளியின் தலைமையாசிரியை (பொ) சாரதா, ஒருங்கிணைப்பாளர் அப்பாதுரை தலைமை வகித்தனர். தேசிய சாம்பியனும், மாநில பூப்பந்து கழக இணைச் செயலருமான விஜய் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.

இதில் சென்னை, கடலூர், தஞ்சை, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 25 அணியினர் பங்கேற்றனர். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் பகுதிகளை சேர்ந்த நடுவர்கள் ராஜா, அர்த்தரசு, அசோகன், பரணி, தீபக் பங்கேற்றனர். இன்று இறுதி கட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.

Next Story