குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கம்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கம்
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி சார்பில், மேற்கு காலனி பகுதியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி சார்பில், மேற்கு காலனி பகுதியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி சார்பில், மேற்கு காலனி பகுதியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதன் துவக்க விழாவில் பி.டி.ஏ. தலைவர் ரவி, தலைமை ஆசிரியை கவுசல்யா மணி தலைமை வகித்தனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை கவுசல்யாமணி கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளி செயல்பட முடியாமல், மாணவ, மாணவியர்களின் கல்வி தடை பட்டதால், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாணாக்கர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் எனும் வகையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி சார்பில், நாராயண நகர் பகுதியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. தலைமை ஆசிரியை பாரதி தலைமை வகித்தார். இதன் துவக்க விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜோதி, ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். வருகை தந்த மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி நிகழ்வு ஆகியன நடத்தப்பட்டன.

இதேபோல் கலைமகள் வீதியில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். பி.டி.ஏ. நிர்வாகி புவனேஷ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். வருகை தந்த மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி நிகழ்வு ஆகியன நடத்தப்பட்டன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil