திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு: பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக தேர்வானத்தையொட்டி குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க ஸ்டாலின், தி.மு.க.வின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, சியாமளா, நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
நகரில் உள்ள 33 வார்டுகளில் நகர செயலர் செல்வம் ஆதரவு தி.மு.க. கவுன்சிலர்கள், சேர்மன் விஜய்கண்ணன் ஆதரவு கவுன்சிலர்கள் அந்தந்த பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள், அன்னதானம் வழங்கினார்கள். சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில்கள், ரேசன் கடைகள், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
குமாரபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மனுக்கு 2ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மனும், மாவட்ட தி.மு.க. துணை செயலருமான சேகரின் 2ம் ஆண்டு நினைவு நாள் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் மற்றும் ஆனங்கூர் பிரிவு சாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சேகரின் திருவுருவப்படத்திற்கு நகர செயலர் செல்வம் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
சேகர் நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச அமரர் குளிர்சாதன பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர செயலர் செல்வம் வழங்கினார். பெட்டி தேவைபடுவோர் தொடர்புக்கு : மொபைல் எண்கள்: 81222 88867, 99425 95399.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu