எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம்!
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கப்பட்டது.
எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில் – தேசிய மாணவர் படை துவக்கம்
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில் - தேசிய மாணவர் படை துவக்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில் - தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது. தாளாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் மிராஷ் கரீம் வரவேற்றார். கமாண்டிங் அதிகாரியான கர்னல் தினேஷ் ராஜா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய மாணவர் படையை துவக்கி வைத்தார். கர்னல் தினேஷ் ராஜா பேசியதாவது:
ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் சகோதரத்துவத்தை தேசிய மாணவர் படை வலியுறுத்துகிறது. இதில் பயிற்சி பெறுவதால், உடல் உறுதி அடைவத்துடன், கல்வியில் சிறந்து விளங்கவும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தவறாமல் தீவிர பயிற்சி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உடற்கல்வி இயக்குநர் வசந்தகுமார், என்.சி.சி. அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பயிற்சி அதிகாரியான சீனிவாசன் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
வசந்தகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu