கூட்டணி ஆட்சி இல்லை என்று இடைப்பாடி பழனிச்சாமி சொன்னது சரிதான் எஸ்.எஸ்.எம். கல்லூரி விழாவில் நடிகை கஸ்தூரி பேட்டி

கூட்டணி ஆட்சி இல்லை என்று இடைப்பாடி பழனிச்சாமி சொன்னது சரிதான் என, எஸ்.எஸ்.எம். கல்லூரி விழாவில் நடிகை கஸ்தூரி பேட்டியளித்தார்.

கூட்டணி ஆட்சி இல்லை என்று இடைப்பாடி பழனிச்சாமி சொன்னது சரிதான்

எஸ்.எஸ்.எம். கல்லூரி விழாவில் நடிகை கஸ்தூரி பேட்டி


கூட்டணி ஆட்சி இல்லை என்று இடைப்பாடி பழனிச்சாமி சொன்னது சரிதான் என, எஸ்.எஸ்.எம். கல்லூரி விழாவில் நடிகை கஸ்தூரி பேட்டியளித்தார்.

குமாரபாளையம் எஸ்,எஸ்,எம். பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா தாளாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கஸ்தூரி பங்கேற்று, அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, விடுப்பு எடுக்காத மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது:

மாணவ, மாணவியர் நன்கு படித்து சம்பாதிக்கும் போது, பெற்றோர்களுக்கு கொடுத்து, இல்லாதவர்களுக்கும் கொடுங்கள். எதையும் துணிந்து செயல்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு பேசினார்.

நிருபர்களுக்கு நடிகை அளித்த பேட்டியில் கூறியதாவது:

அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., விஜய் கட்சி, நாம் தமிழர் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி ஆட்சி இல்லை என்று இடைப்பாடி பழனிசாமி சொன்னது, மிகவும் பொறுப்புணர்வுடன் பேசி உள்ளார். பின்னாளில் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என சொல்லியுள்ளார். இங்கு இரட்டை இலைக்கு ஆதரவாக கூட்டணி அமைவது தான் சரி. தி.மு.க.விற்கு சரியான எதிர்க்கட்சி அ.தி.மு.க. தான். யாரை ஆட்சியில் அமர வைக்கணும் என்பதில், யாரை அமர வைக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக தற்போது உள்ளனர். த.வெ.க. கட்சிக்கு விஜய்க்காக தான் எல்லோரும் வருகிறார்கள். விஜய் மக்களை சந்திக்க வேண்டும்.வெறும் அறிக்கை மட்டுமே கொடுத்து வருவது சரியல்ல. அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பது கூட, ஈ.சி.ஆர்.இல் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தான் அணிவிக்கிறார். தி.மு.க.வினர் கூட ஆபாசமாக பேசி கூட, தங்களை தினமும் அடையாளம் காட்டிக்கொண்டு உள்ளனர். மற்ற கட்சியினரும் தங்களை எதோ ஒரு விதத்தில் மக்கள் மனதில் பதியும் படி செய்து வருகிறார்கள். விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். 2021ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. நோட்டாவை விட குறைவான ஓட்டுகள் பெற்றனர். தற்போது 18 சதவீதம் ஓட்டுகள் பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது. நாம் தமிழர் 8 சதவீதம் ஓட்டுகள் பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சி உருவாகியுள்ளது. அவர்கள் எத்தனை சதவீத ஓட்டுக்கள் பெற போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர். யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகிப்பவர்கள், தமிழர் திருவிழாவிற்கு வாழ்த்து சொல்ல மாட்டோம் என்றும், சனாதனத்தை அழிப்போம் என்றும் கூறி வரும், நாத்திக கொள்கை உடையவர்கள்தான் நிர்வகித்து வருகிறார்கள். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொன்ன, இடைப்பாடி பழனிசாமி இன்று வழக்கை திரும்ப பெற்றது என்பது, பிரிந்தவர்கள் கூடினார்கள் என்றும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாகி வருகிறது என்றும்தான் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு அப்படி அமைவது நல்லதுதான். எல்லோருமே ஜெயலலிதாவை அம்மாவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழி நின்று, செயல்பட்டவர்கள்தான்.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் என்பது பொய். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், தி.மு.க.வினருக்கு பிடிக்காது. மத்திய அரசு திட்டமான வீடுகள் கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்ற திட்டங்கள் வெற்றி பெற்றால், தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி, ஸ்டாலின் ஆட்சி சாதனைகள், உதயநிதி சாதனைகள் என்றுதான் சொல்வார்களே தவிர, மத்திய அரசு திட்டம், என்று கூட சொல்லவே மாட்டார்கள். வெள்ள நிவாரண, இதர நிவாரண உதவி கூட அப்படிதான், சொல்வார்கள். நிதி கொடுக்கவில்லை, அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய தொகையை தராமல் வஞ்சித்து விட்டார்கள் என்று சொல்வது சரியல்ல. தி.மு.க.வினர் தொழில் ரகசியம் என்னவென்றால், எவ்வளவு நிதி தேவையோ, அதை கேட்காமல், மிகப் பெரிய நிதியை கேட்பார்கள். அதை யாராலும் கொடுக்க முடியாது. பின்னர், அரசு ஊழியர்களிடம், நாங்கள் கொடுக்க தயார், ஆனால், அவர்கள் கொடுக்கவில்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள். எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பது யாருக்கு, எப்படி தெரியும்? ஊடகம், பத்திரிக்கை மூலமாகத்தான் தெரியும். இரு நாட்களுக்கு முன்பு தி.மு.க. அமைச்சர் செய்த சம்பவம் குறித்து, வீடியோ வெளியில் வந்ததால்தான் மக்களுக்கு தெரிந்தது. அது வராமல் இருந்து இருந்தால், எப்படி தெரிந்திருக்கும். அப்படியே அமுக்கி விட்டிருப்பார்கள். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வரும் முன், சொல்வதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்று கூறியதுடன், முதல் கையெழுத்து மது ஒழிப்புதான் என்று சொன்னார்கள். இன்னும் கையெழுத்து போட ஸ்டாலினுக்கு கை வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு இப்படி சீர் கெட்டு இருந்ததா? ரோடுகளில் சி.சி.டி.வி. கேமரா இருந்தது. இப்போ எவ்வளவு கேமராக்கள் பழுதாகி உள்ளன. ரோடுக்கு ரோடு, போலீஸ் நிற்க வேண்டிய இடந்தில் கஞ்சா, மது விற்பனை வியாபாரி நின்று கொண்டு வியாபாரம் செய்து கொண்டு உள்ளான். இதனை யாரிடம் சொல்வது. கட்சியினர், மூத்த அதிகாரிகளை விடுங்கள், தி.மு.க. அமைச்சர்கள் வசம் சொல்லலாம் என்றால், மேடை போட்டு, பெண்களை பற்றி, ஆழ்மனதில் உள்ள வக்கிர புத்திகளை சொல்லி கலாச்சாரத்தை சீரழித்து வருகிறார்கள். பெண்கள், மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். பெண்கள் உதவி தொகை வரவேற்க வேண்டிய திட்டம்தான். அது உரிய நபர்களுக்கு போய் சேர்ந்ததா? இல்லை என்பதுதான் உண்மை. மது அரக்கனை ஒழியுங்கள். வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள். பெண்களுக்கு இலவச பஸ் விட்டு, அவர்கள் எங்கே போவார்கள்? வேலையை கொடுங்கள். வேலைக்கு செல்லட்டும். அதை விடுத்து, இலவசம், இலவசம் என்று சொல்லி என்ன பயன்? தமிழ்நாட்டு மக்கள் உழைக்க அஞ்ச கூடியவர்கள் அல்ல. உழைத்து, ஊதியம் பெற்று, பஸ்சில் செல்ல தயாராக உள்ளனர்.

வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி, தமிழ்நாட்டுக்கு வருவதால், தமிழக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று சொல்ல முடியாது. அதுவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து வருவது இல்லை. , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் இருந்துதான் வருகிறார்கள். தமிழ்நாடு, சுதந்திரம் பெறும் முன்பே வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாறியது. மேலும் ராஜாஜி, காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்த காலங்களில், தமிழகத்தை மிக பெரிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றினர். சம உரிமை, பெண்கள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி, சமூக நீதி உள்ளிட்ட பல விசயங்களில் முன்னறிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. அதனால் வட மாநில தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். மாணவர்கள் அரிவாளால் தாக்கி கொள்கின்றனர் என்று செய்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் போதை கலாச்சாரம் தான். எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மாணவர்கள் சீரழிய ஆட்சியாளர்கள் காரணமாக இருக்க கூடாது. முதல்வர் தனி கவனம் செலுத்தி, மாணவர்களை குறி வைத்து செய்யபடும் போதை பொருட்கள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள், வாயை, கட்டி, வயிற்றை கட்டி பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்பி வைத்தால், இப்படி அவர்கள் சீரழிய விடலாமா? தி.மு.க. ஆட்சி அகற்ற வேண்டும் என்று, தொடர்ந்து வரும் பாலியல் சம்பவங்களால் பொதுமக்கள் வெறுத்து, அதனை மாற்ற தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் :

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில் நடிகை கஸ்தூரி பேட்டியளித்தார்.

Next Story