ஸ்ரீ பத்திரகிரியார் சச்சிதானந்த திருமேனி பிரதிஷ்டை விழா

ஸ்ரீ பத்திரகிரியார் சச்சிதானந்த  திருமேனி பிரதிஷ்டை விழா
X
ஸ்ரீ பத்திரகிரியார் சச்சிதானந்த திருமேனி பிரதிஷ்டை விழா

ஸ்ரீ பத்திரகிரியார் சச்சிதானந்த திருமேனி பிரதிஷ்டை விழா

குமாரபாளையத்தில் ஸ்ரீ பத்திரகிரியார் சச்சிதானந்த திருமேனி பிரதிஷ்டை விழா நடந்தது.

குமாரபாளையம் காந்தி நகர், பத்ரகிரியார் தியான மண்டபத்தில் சித்தர் பெருமான் பத்ரகிரியார் உருவ திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பெங்களூர், காங்கேயம், பவானி, திருச்சி, கோவை, கரூர், மதுரை, திருச்செங்கோடு, சேலம், பத்ராவதி, மற்றும் குமாரபாளையம் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மண்டபத்தில் பிரதி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரையிலும், மாலை 06:00 மணி முதல் 07:30 மணி வரையிலும் மண்டபம் திறந்திருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!