எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்கக்கோரி சிபிஎம் மனு

எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்கக்கோரி சிபிஎம் மனு
X

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்க கோரி சி.பி.எம். சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்க கோரி சிபிஎம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பள்ளிபாளையம் எஸ்.பி.பி.பேப்பர் மில் சார்பில் காவேரி, ஆயக்காட்டூர், பாப்பம்பாளையம், ஒடப்பள்ளி உள்ளிட்ட பல கிராம மக்கள் பயனடையும் வகையில் சமூக நலத்திட்ட மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

இதில் ஒரு டாக்டர், செவிலியர் ஒருவர், உதவியாளர் ஒருவர் ஆகியோர் தினமும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று சிகிச்சை செய்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

ஆனால் சில நாட்களாக டாக்டர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இப்பகுதி பொதுமக்கள் பயனடையும் வகையில் மீண்டும், டாக்டர் நியமனம் செய்து சிகிச்சை வழங்க வேண்டி, எஸ்.பி.பி. மில் நிர்வாகத்திடம் சி.பி.எம். சார்பில் ஒன்றிய குழு செயலர் ரவி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் கருப்பண்ணன், கிளை செயலர் சண்முகம், ஆதிநாராயணசாமி, துரைசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!