சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி

சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழகத்தின் ஆன்மீக சொற்பொழிவு  நிகழ்ச்சி
X

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் மதுரை கூடல் ராகவன் பங்கேற்று,நல்வழி காட்டும் மார்கழி எனும் தலைப்பில் பேசினார்.

குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழகம் சார்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை 10 நாட்கள் தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான ஓதுவார்கள், சண்முகசுந்தர தேசிகர், வெங்கடேச ஓதுவார் பங்கேற்று திருமுறை பண்ணிசை பாடினார்கள். நேற்று மதுரை கூடல் ராகவன் பங்கேற்று,நல்வழி காட்டும் மார்கழி எனும் தலைப்பில் பேசினார். நாளை சென்னை திருமந்திரச் செல்வம் எனும் தலைப்பில் சென்னை சிவகுமார் பேசவுள்ளார்.

Tags

Next Story
ai based agriculture in india