குமாரபாளையத்தில் திருமுறைக்கழக ஆன்மீக சொற்பொழிவு

குமாரபாளையத்தில் திருமுறைக்கழக ஆன்மீக சொற்பொழிவு
X

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் திருச்சி சுமதிஸ்ரீ சொற்பொழிவாற்றினார்.

குமாரபாளையம் அருகே சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழக ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழா குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை 10 நாட்கள் தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது. ஜன. 5, 6ல் ஆனை முகனும், ஆஞ்சநேயனும் எனும் தலைப்பில் கிருஷ்ண ஜகன்னாதன் சொற்பொழிவு நடைபெற்றது.

கொரோனா பரவலால் தமிழக அரசு உத்திரவின்படி ஜன. 7,8,9 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஜன. 10,11,12,13 நாட்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் நேற்று திருச்சி சுமதிஸ்ரீ பங்கேற்று, ஆன்மீகம் வழங்கும் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

Tags

Next Story