வேகமாக வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதாமல் இருக்க மின் கம்பத்தில் மோதி விபத்து..!

வேகமாக வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதாமல் இருக்க மின் கம்பத்தில் மோதி விபத்து..!
X

மின்கம்பத்தில் மோதி நிற்கும் தனியார் பேருந்து.

பள்ளிபாளையம் அருகே லாரி மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து டெம்போ மற்றும் மின் கம்பத்தில் மோதியது.

பள்ளிபாளையம் அருகே லாரி மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து டெம்போ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளிபாளையம் அருகே உள்ள தார் காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்க சென்ற டேங்கர் லாரியின் ஓட்டுனர் தனது வண்டியை பள்ளிபாளையம் வெப்படை செல்லும் சாலையில் திருப்புவதற்காக பின்புறமாக செலுத்தினார். அப்பொழுது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் வேகமாக பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

அப்பொழுது சாலையில் குறுக்கே டேங்கர் லாரி எதிர்பாராமல் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வாகனத்தை விபத்து ஏற்படுத்தாமல் தவிர்ப்பதற்காக திருப்பிய பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் நின்று கொண்டிருந்த மினி டெம்போவின் மீது மோதி பின்னர் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். மின்கம்பம் உடைந்து சேதமானது. இதன் காரணமாக தார்காடு, வெடியரசம் பாளையம் மற்றும் ஒட்டமெத்தை பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்த தனியார் பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேரத்தை காரணம் கூறி தனியார் பேருந்துகள் இப்படி வேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. ஏதோ அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. வேகமாகச் செல்லும் பேருந்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!