குமாரபாளையம் முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு...

குமாரபாளையம் முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு...
X

குமாரபாளையம் சேலம் சாலை பாலமுருகன் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஏராளமான முருகன் கோயில்கள் உள்ளன. இந்த நிலையில், சஷ்டியையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை பாலமுருகன் கோயில், பள்ளிபாளையம் சாலை மருதமலை முருகன் கோயில், வட்டமலை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.


பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சஷ்டி குறித்து ஆன்மிக பெரியோர்கள் கூறியதாவது:

சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சஷ்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஆறாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஆறாம் நாளுமாக இரண்டு முறை சஷ்டித் திதி வரும்.

அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்சச் சஷ்டி என்றும், பூரணையை அடுத்த சஷ்டியைக் கிருட்ண பட்சச் சஷ்டி என்றும் அழைக்கின்றனர். சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும்.

இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். சட்டித் திதி ஆறாவது திதியும் 21 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 60 பாகையில் இருந்து 72 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சச் சஷ்டித் திதியும், 240 பாகையிலிருந்து 252 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சச் சஷ்டியும் ஆகும். சஷ்டி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும் என ஆன்மிக பெரியோர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!