குமாரபாளையம்; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம்; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
X

ஆவணி சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஆவணி சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.

இதே போல் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோயில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!