விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு
X

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க.வினர் குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

விஜயகாந்த் பூரண நலம் பெறவேண்டி குமாரபாளையத்தில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் உடல்நலமின்மையால் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. மாவட்ட செயலர் விஜய் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, பள்ளிபாளையம் நகர செயலர் வெள்ளிங்கிரி, ஒன்றிய செயலர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!