குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள்
X

சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் ஜெய் ஹிந்த் நகர் சித்தி விநாயகர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். 

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் ஜெய் ஹிந்த் நகர் சித்தி விநாயகர் கோவில், உடையார்பேட்டை ராஜ விநாயகர் கோவில், புத்தர் தெரு நடன விநாயகர் கோவில், கலைமகள் வீதி வெள்ளை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதே போல் குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விச்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!