தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
X
குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. பொதுமக்கள் சுவாமிக்கு எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதே போல் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், ஊராட்சிக்கோட்டை சிவன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!