தமிழ் புத்தாண்டையொட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் சாய் பாபா
குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டையொட்டி குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.
சாய்பாபா புகழ் பாடும் பஜனை பாடல்களை பக்தர்கள் பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குமாரபாளையம் நில முகவர்கள் சங்கத்தார் சார்பில் மாலை 01:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டன. குமாரபாளையம், பள்ளிபாளையம், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், வேமன்காட்டுவலசு, சத்யா நகர், எம்.ஜி.ஆர். நகர், பவானி,சங்ககிரி, வட்டமலை, கள்ளிபாளையம், உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.
இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள பல கிராமங்கள், நகரங்களை சேர்ந்த பல்லாயிரம் பேர் வந்து பிரதி வியாழன் நாளில் சுவாமியை வணங்கி செல்வது வழக்கம். இந்த நாளில் கோவில் சார்பில் அல்லது, ஒரு தனி நபர் அல்லது, ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து கூட, வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்கள். இன்று நடைபெற்ற அன்னதானத்தில் குமாரபாளையம் நில முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவர்கள் சில நாட்கள் முன்பு பத்திரபதிவு அலுவலகத்தின் அருகே நீர் மோர் பந்தல் அமைத்தனர். கடும் கோடை வெப்பத்தின் தாக்கம் தங்காமல் வருவோருக்கு இந்த நீர் மோர் பந்தல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த கோவில் உருவாகி சில ஆண்டுகள் தான் ஆகியுள்ளது என்றாலும், வேண்டுதல் வைத்தால் அது நிறைவேறி வருவதாக பெரும்பாலான மக்களால் கூறப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேண்டுதல் நிறைவேறினால், பக்தர்கள் பிரதி உபகாரமாக அன்னதானம் உள்ளிட்ட மிக முக்கியமான தேவைகளை செய்து வருகிறார்கள்.
பல ஊர்களில் இருந்து வரும் அன்பர்களை காணும் போது மிகவும் சக்தி வாய்ந்த சுவை என்பதில் சற்றும் ஐயம் இல்லை. எல்லோரும் அன்னதானம் செய்வது நல்லது. மேலும் தினமும் கோவில் பூஜைக்கு தேவையான பூஜை பொருட்கள் வாங்கி தருவதும் கோவில் நிர்வாகிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu