பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

சனிக்கிழமையையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது;

பெருமாள் கோவிலில் கோபுரம் இருப்பின் காலணிகளை கழற்றி விட்டு கோபுரத்தை தலை நிமிர்ந்து கைகளை தலை மேல் உயர்த்தி கலசங்களை கண்டு வணங்க வேண்டும்.

பின்பு கோவிலுக்குள் சென்று கொடி மரம் அல்லது பலிபீடத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் பின்னர் உள்ளே சென்று ஸ்ரீ கருடன் சந்நிதியில் ஸ்ரீ கருடனை தரிசிக்க வேண்டும். அதையும் கடந்து ஜெய விஜய துவார பாலகர்களை வணங்கி பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பெருமாளை தரிசிக்கும் நேரம் மௌனமாக பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை கண்களால் கண்டு ரசித்து மனதுக்குள் தியானித்து பெருமாளுக்கு செய்யும் ஆரத்தியை கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும். கொடிமரம் தாண்டிய பின்னர் கைகளை தலைக்கு மேல் உயர்த்த கூடாது. கைகளை மார்பிலிருந்து மூக்கு நுனி வரை மட்டுமே கொண்டு செல்லலாம். தீபாராதனை முடிந்த பின்னர் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி போன்ற பிரசாதங்கள் கொடுத்தால் வாங்கிக்கொண்டு சந்நிதியை நிதானமாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் வெளியேறவும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil