குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு
X

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி அம்மன் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மார்ச் 1 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

மார்ச் 8ல் சக்தி அழைத்தல், மார்ச் 9ல் பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு, மார்ச் 10ல் மஞ்சள் நீராட்டு வைபவங்கள் நடைபெறவுள்ளன. திருவிழாவையொட்டி அம்மன் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தினமும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!