குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார  வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் திருவிழா மார்ச் 1 -ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 5ல் பூவோடு வைத்தல், மார்ச் 9ல் காலை 09:00 மணிக்கு காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுதல், மாலை 06:00 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம்,நடைபெறுகிறது.

மார்ச் 10ல் கம்பம் காவேரி ஆற்றில் விடுதல், மார்ச் 12ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. தினமும் கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

மகா ராஜகாளியம்மன் சம்பூரணதேவி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!