குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்..
தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாம் குறித்து, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி கூறியதாவது:
வட்ட வழங்கல் துறை சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பயனாளர்கள் பெயர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற முகாமில் இது சம்பந்தமாக பல மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சிறப்பு முகாம் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-இன் கீழ் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கும், தற்போதுள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், அங்காடி மாற்றம் மற்றும் மாவட்ட மாறுதல் போன்ற பணிகளை செய்து கொள்ள பொது மக்கள் வட்ட வழங்கல் அலுவலத்திற்கு செல்லாமலே தாங்கள் வசித்து வரும் இடத்தில் இருந்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்திடவேண்டும். அவற்றின் மீது தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரால், ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய மின்னனு குடும்ப அட்டைகள் சென்னையில் இருந்து அச்சிட்டு வரப்பெற்றவுடன், உரிய நியாயவிலை அங்காடிகள் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அந்த அட்டை விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu