குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதைனை

குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதைனை
X

குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதி வியாழக்கிழமை நாளில் சாய்பாபா கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். குமாரபாளையம், எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே, பூலாக்காடு சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவன் கோவில்களில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விச்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!