தென்னிந்திய அளவில் கராத்தே போட்டியில் குமாரபாளையம் வீரர்கள் சாதனை..!

தென்னிந்திய அளவில்  கராத்தே  போட்டியில் குமாரபாளையம் வீரர்கள் சாதனை..!
X

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற குமாரபாளையம் வீரர் மாஸ்டர் இன்பா.

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமாரபாளையம் வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமாரபாளையம் வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் மான்போர்ட் உல் விளையாட்டு அரங்கில் நடந்தது. மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாஸ்டர் இன்பா, சர்வேஸ், இருவரும் தென்னிந்திய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.


6 தென்னிந்திய மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். குமாரபாளையத்தை சேர்ந்த மாஸ்டர் இன்பா, 7 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் தங்கப்பதக்கமும், 7 வயதிற்குட்பட்ட கட்டா போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். 12 வயதிற்குட்பட்ட கட்டா போட்டியில் மாஸ்டர் சர்வேஸ் வெண்கலப்பதக்கம் வென்றார்.சாதனை படைத்த சாதனையார்களை ஷேடோ காய் கராத்தே தலைவரும், பயிற்சியாளருமான ஷிகன்ஷா உள்பட பலரும் வாழ்த்தினர்.

குமாரபாளையம் பகுதியில் இதைப்போன்று விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்து வருவது தொடர்ந்து நடப்பது பாராட்டுக்குரியது.

Tags

Next Story