குமாரபாளையம்; சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா

குமாரபாளையம்; சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா
X

குமாரபாளையம் சவுண்டம்மன் யாக சாலை பூஜையையொட்டி அம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா நடந்தது.

சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா

குமாரபாளையத்தில் சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா நடந்தது.

குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் வீர குமாரர்கள் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில், சவுண்டம்மன் யாகபூஜை மற்றும் பூணூல் திருவிழா பாலக்கரை பகுதியில் நடந்தது. முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. அலங்கரிக்க மேடையில் சவுண்டம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.

சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கத்தாளபேட்டை பகுதியிலிருந்து வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு திருவீதி உலா வந்த அம்மனை அழைத்து வந்தனர். திருவள்ளுவர் வீதி, ராஜா வீதி, ஜே.கே.கே. சாலை, தம்மண்ணன் வீதி, அக்ரஹாரம், வழியாக பாலக்கரை விழா பந்தலில் அம்மன் திருவீதி உலா நிறைவு பெற்றது. இதையடுத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


குமாரபாளையம் பூணூல் திருவிழாவையொட்டி சவுண்டம்மன் யாக சாலை பூஜை நடந்தது.

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!