குமாரபாளையத்தில் சவுண்டம்மன் திருக்கல்யாண வைபோகம்

குமாரபாளையத்தில் சவுண்டம்மன் திருக்கல்யாண வைபோகம்
X

குமாரபாளையம் ராஜா வீதி சவுண்டம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி சவுண்டம்மன் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சவுண்டம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நேற்று ராஜா வீதி சவுண்டம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. சிவனின் வேடமிட்ட குழந்தையை மேள தாளத்துடன், சீர் வரிசைகளுடன் பக்தர்கள் அழைத்து வந்தனர்.

அலங்கரிக்க பந்தலில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு காட்சியளித்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, அம்மன் திருகல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலிலும் சவுண்டம்மன் திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!