சவுண்டம்மன் கோவில்களில் அம்மன் திருக்கல்யாணம்

சவுண்டம்மன் கோவில்களில்   அம்மன் திருக்கல்யாணம்
X
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

சவுண்டம்மன் கோவில்களில்

அம்மன் திருக்கல்யாணம்

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

சித்ரா பவுர்ணமியன்று குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களில் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நடந்து, சிவபெருமான் வேடமணிந்த குழந்தைகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திருகல்யாணம் நடந்தது. சிவபெருமான் வேடமணிந்த குழந்தைகள் அம்மன் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தனர். பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, பக்தி பாடல்கள் பாடி, சுவாமிகளை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

படவிளக்கம் :

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

Next Story