குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் கோவில் திருவிழாவில் கொடியேற்றம்

குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் கோவில் திருவிழாவில்   கொடியேற்றம்
X

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் சவுண்டம்மன் திருவிழாவையொட்டி கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா மற்றும் பூணூல் திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று கொடியேற்றம் மற்றும் காப்பு காட்டுதல் வைபவம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆகஸ்டு 11ல் கணபதி ஹோமம், சக்தி அழைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. ஆகஸ்டு 12ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா கோவிந்தம்மாள், விழாக்குழு தலைவர் சுப்ரமணி, செயலர் கணேசன், பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!