சவுண்டம்மன் திருவிழா சக்தி அழைப்பு: கத்தி போட்ட வீர குமாரர்கள்

சவுண்டம்மன் திருவிழா சக்தி அழைப்பு: கத்தி போட்ட வீர குமாரர்கள்
X

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் சக்தி அழைப்பு வைபவத்தில் வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.

குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவிற்காக சக்தி அழைப்பு வைபவத்தில் கத்தி போட்டவாறு அம்மனை வீர குமாரர்கள் அழைத்து வந்தனர்.

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையில் நடைபெறுவது வழக்கம். சேலம் சாலை, பழைய பேட்டை சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் முகூர்த்தக்கால் அமைக்கப்பட்டது. நேற்று சக்தி அழைப்பு வைபவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

நேற்று மாலை 07:00 மணிக்கு காவேரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் வைபவம் நடைபெற்றது. இதில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். காவேரி ஆற்றிலிருந்து கோவில் வரையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சக்தி அழைப்பு வைபவத்தை கண்டு ரசித்து அம்மனை வழிபட்டனர்.

அம்மன் சக்தி கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 09:00 காவேரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைத்தல், இரவு 07:00 மணிக்கு மகா ஜோதி திருவீதி உலாவும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai and iot in healthcare