குமாரபாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை துவக்கம்

குமாரபாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட   மண் பரிசோதனை துவக்கம்
X

கத்தேரி பிரிவு பகுதியில் நடைபெறும் மண் பரிசோதனைப் பணிகள்.

குமாரபாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட மண் பரிசோதனைப் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் அதிக வாகனங்கள் சாலையை கடந்து செல்கின்றது. தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம், வேமன்காட்டுவலசு, சத்யா நகர், அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த பகுதிகளில் விசைத்தறி கூடங்கள், சாயப்பட்டறைகள், விவசாய விளை நிலங்கள், ஸ்பின்னிங் மில்கள், தானியங்கி விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அதிக விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்தும், விபத்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அவசியம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் பலனாக இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை பணிகள் தற்போதுதுவங்கியுள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!