குமாரபாளையம் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த பாம்பு மீட்பு

குமாரபாளையம் அருகே  கோழிப்பண்ணையில் புகுந்த பாம்பு மீட்பு
X

கோழிப்பண்ணையில் மீட்கப்பட்ட பாம்பு.

குமாரபாளையம் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த பாம்பை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பபுள்ளக்கவுண்டம்பட்டி பகுதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் சரவணன், 35. இவரது கோழிப்பண்ணையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு கோழிகள் இறந்து கிடப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

நேற்றுமுன்தினம் இரவு, கோழி அடைகாத்து வந்த முட்டை மீது பாம்பு ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இரவில் செய்வதறியாத நிலையில் நேற்று காலை குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த படையினர், 5 அடிக்கும் மேலான நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதனை ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!