பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திற்குள் பாம்பு..!
குமாரபாளையம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் நுழைந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் நுழைந்த பாம்பை பிடித்த தீயணைப்பு படையினர்
குமாரபாளையம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் நுழைந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குமாரபாளையம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கிருந்துதான் நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து முகவர்களும் இங்கு வந்துதான் ஆவின் பாலுக்குரிய தொகை செலுத்துவார்கள்.
ஆள் நடமாட்டம் எப்போதும் இருந்து வரும் இந்த அலுவகலத்தில் நேற்று மாலை 02:00 மணியளவில், சுமார் 10 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்து, பாம்பை பிடித்தனர்.
அக்கம் பக்கம் உள்ளம் கடையினர் இதனை வேடிக்கை பார்த்தனர். இந்த அலுவலகம் அருகே கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் ஓடை உள்ளது. இதில் வரும் பாம்புகள் அடிக்கடி இங்கு வருகிறது. தொடர்ந்து இதே போல் பலமுறை நடந்துள்ளதால், பணியாளர்களும், இங்கு வரும் ஆவின் முகவர்களும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கோம்பு பள்ளம் ஓடை உள்ள, பின்புற பகுதியில் எவ்வித விஷ ஜந்துக்களும், உள்ளே நுழையாதபடி, பாதுகாப்பு பணிகள் செய்திட வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu