குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்ட பகுதியில் புகுந்த பாம்பு: தீயணைப்பு படையினர் மீட்பு

குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்ட பகுதியில் புகுந்த பாம்பு: தீயணைப்பு படையினர் மீட்பு
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, காந்திநகர் இரண்டாவது வீதி, தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில், துரைசாமி வீடு அருகில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புப்படையினர்.

குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் புகுந்த பாம்பை மீட்புக்குழுவினர் பிடித்தனர்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, காந்திநகர் இரண்டாவது வீதி, தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில், துரைசாமி வீடு அருகில் பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் சென்ற மீட்புக்குழுவினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது கண்ணாடி விரியன் இனத்தை சேர்ந்தது எனவும் மீட்புக்குழுவினர் கூறினர். பிடிபட்ட பாம்பை ஆள் நடமாட்டமில்லாத வனத்துறை பகுதியில் விடப்பட்டது.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் அடிக்கடி பாம்புகள் வருவது வழக்கமாக உள்ளது. இங்குள்ள வடிகால் தூய்மை படுத்தாமல் உள்ளது, அதிக முட்புதர்கள் மண்டி கிடப்பதே இதற்கு காரணமாக உள்ளது.

குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் இடம் என்பதால், நோய்கள் பரவாமல் இருக்கவும், இது போல் விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கவும் இந்த பகுதியில் தூய்மை பணியினை குப்பாண்டபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil